வலிமை படத்தின் பவர்ஃபுல்லான புது ப்ரோமோ இதோ!
By Anand S | Galatta | February 18, 2022 16:46 PM IST
தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரம நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் அஜித்குமார் கடைசியாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இதனைத் தொடர்ந்து அஜித் குமாரின் அடுத்த #AK61 திரைப்படத்தையும் வினோத் H.இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ பிராஜக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோ இணைந்து வழங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவர இருக்கும் வலிமை திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் குமார் நடிக்க, ஹூமா குரேஷி, சுமித்ரா, யோகிபாபு, விஜய் டிவி புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளார்.
வலிமை திரைப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக ரிலீசாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் திரையரங்குகள் அனைத்தும் 100% இறுக்கையோடு இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் வலிமை படத்தின் முதல் காட்சிகள் (FDFS) அதிகாலை 4 மணி முதல் ரசிகர்களுக்காக திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படத்திலிருந்து பவர்ஃபுல்லான புதிய வீடியோ வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
BREAKING: Big change in Ajith Kumar's Valimai - New Development Revealed!
17/02/2022 07:00 PM
Catch the latest trending 'Naanga Vera Maari' Promo Teaser from Ajith's Valimai!
17/02/2022 11:06 AM