தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியிடாத ஜனவரி 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் H.வினோத் - அஜித் குமார் - போனி கபூர் கூட்டணியில் துணிவு திரைப்படம் தயாராகி இருக்கிறது.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் விஜய் வேலு குட்டி படத்துக்கு செய்துள்ள துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுப்ரீம் சுந்தரின் அதிரடியான ஸ்டண்ட் இயக்கத்தில் ஆக்சன் பிளாக் படமாக தயாராகி இருக்கும் துணிவு படத்திற்கு நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் பணியாற்றி இருக்கிறார். முன்னதாக இன்று டிசம்பர் 30ஆம் தேதி துணிவு திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் #WorldOfThunivu என வரிசையாக படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களின் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகின.  

அந்த வகையில் கண்மணி - மஞ்சு வாரியர், தயாளன் - சமுத்திரக்கனி, ராமச்சந்திரன் - அஜய், முத்தழகன் - GM.சுந்தர், ராதா - ராஜதந்திரம் வீரா, க்ரிஷ் - ஜான் கொக்கன், ராஜேஷ் - பக்ஸ், பிரேம் - பிரேம், மேலும் ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் அவர்கள் மை பா என்னும் கதாபாத்திரத்தில் இனிய படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இது தவிர நடிகர் தர்ஷன் முக்கிய இடத்தில் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் கடைசியாக அஜித்குமார் அவர்களின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு அஜித்குமார்...? என கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு இன்னும் வெளியிடாமல் வைத்திருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை டிசம்பர் 31-ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடியான அந்த அறிவிப்பு இதோ…
 

Guns, guts and glory - all set to fire up in style tomorrow!

Set your alarms for 7PM tomorrow, the #ThunivuTrailer is coming

Stay tuned to - https://t.co/pLyyVed06t#ThunivuPongal #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth @BoneyKapoor @ZeeStudios_ @BayViewProjOffl @RedGiantMovies_ pic.twitter.com/Vczo9W4Fwj

— Zee Studios South (@zeestudiossouth) December 30, 2022