தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக முதல் முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் AK62 திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்பபத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கும் அஜித்குமார் - போனி கபூர் H.வினோத் - நீரவ் ஷா கூட்டணியில் தயாராகி இருக்கும் திரைப்படம் துணிவு.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியிடாக ஜனவரியில் ரிலீஸாகிறது. அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்யும் துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 

துணிவு திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்களுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் துணிவு படத்தின் பாடல்கள் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு பாடல் படப்பிடிப்பு நிறைவடைந்தது… அஜித் மற்றும் படக்குழு உடனான பாடல் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் நன்றி… உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் பாடல்கள் படப்பிடிப்போடு துணிவு படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 

And it’s a wrap for thunivu song shoot.. loved every bit of making the songs with Ajith and the entire crew.. thanks to each and everyone..hope u all love it ❤️😄#Thunivu #AjithKumar

— kalyan dance choreographer (@kayoas13) November 29, 2022