அனைத்து சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்த முன்னணி நட்சத்திர நாயகரான நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படமாக தயாராகவுள்ள AK62 திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இதனிடையே இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு. அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. 

துணிவு திரைப்படத்தின் முதல் பாடலாக அனிருத் பாடி இருக்கும் சில்லா சில்லா பாடலுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில்,தற்போது அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது படக்குழு. வருகிற டிசம்பர் 9ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்த துணிவு திரைப்படத்தின் “சில்லா சில்லா” பாடல் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிவிக்கும வகையில் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் இதோ…
 

The Wait is over! 💥 #ChillaChilla is coming to rule your Playlist 😉 from December 09#ChillaChillaFromDec9 #ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@ZeeStudios_ @Udhaystalin @BayViewProjOffl @RedGiantMovies_ @Kalaignartv_off @NetflixIndia pic.twitter.com/3ommR06X16

— Boney Kapoor (@BoneyKapoor) December 5, 2022