தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகராகவும் பல கோடி தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் பக்கா அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக தயாராகி வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்த வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வினோத்-அஜித் கூட்டணி #AK61 படத்தில் 3வது முறையாக மீண்டும் இணைந்துள்ளது. #AK61 திரைப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

போனி கபூர் தயாரிக்கும் #AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக முதல்முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் #AK62 திரைப்படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும்  #AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக பைக் ரைடிங்கில் அதிகம் ஆர்வமுள்ள அஜித்குமார் ஐரோப்பிய நாடுகளில் பைக் ரைடிங் பயணத்தை நிறைவு செய்து, சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். இந்நிலையில் அஜித்குமார், சென்னையில் ரைஃபில் கிளப்பில் இருக்கும் புதிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

THALA AJITH ⚡Recent Video at Rifle Club..!!#Ak61 #AjithKumar #Ajith. pic.twitter.com/PahM99JYYy

— EMPEROR AJITH FC ™ (@EmperorAjithFC) July 26, 2022