தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக திகழும் நடிகர் அஜித் குமார் தற்போது மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் #AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். 3-வது முறையாக இணைந்துள்ள போனிகபூர்-அஜித்குமார்-H.வினோத்-நீரவ்ஷா கூட்டணியில் தயாராகி வரும் #AK61 படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் #AK62 திரைப்படத்தில் அஜித்குமார் இணைகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் #AK62 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனிடையே தற்போது எதிர்மறை விமர்சனங்கள் குறித்து அஜித் குமார் பதில் அளித்துள்ளார்.

எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு சிறிய படத்தில் குட்டி ஸ்டோரி சொல்லியுள்ள அஜித்குமாரின் இந்த மெசேஜை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நம்மில் பலரும் அறிந்த ஒரு தம்பதியினர் கழுதையுடன் இருக்கும் சிறுகதையை கூறும் புகைப்படத்தை அஜித்குமாரின் மேலாளர் பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் நாம் எதை எப்படி செய்தாலும் குற்றம் குறை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்… எதிர்மறை விமர்சனங்களை கண்டு வழியை மாற்றாமல் எது சரி என நம்புகிறோமோ அதை முழுமனதோடு செய்ய வேண்டும் என குறிக்கும் வகையில் அஜித் குமார் எனது அன்பான ரசிகர்களுக்கான மெசேஜாக தெரிவித்துள்ளார். அஜித்குமாரின் இந்த மெசேஜ் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த பதிவு இதோ…