தமிழ் திரையுலக ரசிகர்களின் மாஸ்ஸான ஃபேவரட் ஹீரோவாகவும் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். அடுத்ததாக  சதுரங்க வேட்டை ,தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களின் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. 

தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ ப்ராஜக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. அஜீத் குமாருடன் இணைந்து ஹுமா குரேஷி, யோகிபாபு, மற்றும் விஜய் டிவி புகழ் ஆகியோர் வலிமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா மிரட்டாலன வில்லனாக நடிக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள அதிரடி ஆக்ஷன் படமான வலிமை திரைப்படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளியான வலிமை GLIMPSE வீடியோ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக முதல் பாடலாக “நாங்க வேற மாரி” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அஜித்குமாரின் வலிமை படத்தின் 2-வது பாடலாக இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில், சிட் ஸ்ரீராம் பாடியுள்ள அம்மா பாடல் தற்போது வெளியானது. வலிமை படத்தின் அம்மா பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.