நடிகர் அஜித்குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’ . அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் முன்னதாக வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டை பெருமளவு எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் வங்கி கொள்ளையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்தின் சிறப்பு காட்சி நள்ளிரவு 1 மணிக்கு தமிழகமெங்கும் பெரும்பாலான திரையரங்கி திரையிடப்பட்டது. திரையிடலுக்கு முன்பிலிருந்தே கோலாகலமான கொண்டாட்டங்களுடன் ரசிகர்கள் துணிவு படத்தினை வரவேற்று வருகின்றனர்.

பல இடங்களில் பட்டாசுக்கள் வெடித்தும் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி வரும் நிலையில் சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்கத்தின் ரசிகர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் பொதுவாகவே பெரிய நட்சத்திரங்களின் படங்கள் திரையிடப்படும் போது ரோகினி திரையரங்கில் கொண்டாட்டம் சற்று கூடுதலாக இருக்கும் அந்தவகையில் துணிவு படத்தின் சிறப்பு காட்சிக்கும் கொண்டாட்டம் தீவிரமாக இருந்தது. அப்போது சாலயில் சென்று கொண்டிருந்த லாரி  மீது ஏறி ரசிகர்கள் சிலர் ஆட்டம் போட்டனர் அதில் ஒரு அஜித் ரசிகர் தவறி விழுந்துள்ளார். முதுகு தண்டில்  பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த ரசிகர் பரத்குமார் என்பவருக்கு வயது 19. இவர் சென்னை சிந்தாதரிபேட்டையை செர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கொண்டாட்டத்தில் இந்த நிகழ்வு ஒரு சோக நிகழ்வாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொண்டாட்டங்கள் கூடுதலாக மாறும்போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க கொண்டாட்டத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறையினர் முன்னதாகவே திட்டமிட்டுள்ளனர். இதையும் மீறி ரசிகர்களின் கொண்டாட்டங்கள் கட்டுபாடின்றி செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

தாயரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அஜித்  நடித்து எச் வினோத்  இயக்கிய துணிவு படத்திற்கு வெகுவாக வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதால் குடும்பங்களின் படையெடுப்பும் அதிகளவு எதிர்பார்க்கபடுகிறது. நிச்சயம் வரும் சில வாரம் கொண்டாட்டங்களின் தீவிரம் அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, இதனையடுத்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை பாதுகாப்பாக வெளிபடுத்த வேண்டும் என்று காவல் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கொண்டாட்டங்களின் முன்னேற்பாட்டினையும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேலும் தீவிர படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.