தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக அஜித்குமார் நடிக்கும் AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK62 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படத்திற்கும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் குமார் உடன் இணைந்து பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கும் துணிவு திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் ராஜதந்திரம் வீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்துள்ள துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.அடுத்த ஆண்டு(2023) ஜனவரியில் பொங்கல் வெளியீடாக துணிவு திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் துணிவு திரைப்படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த நிலையில், தற்போது நடிகர் அஜித்குமாரும் துணிவு டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித்குமார் டப்பிங்கில் ஈடுபட்டிருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித்குமாரின் அந்த புகைப்படம் இதோ…

 

NEW SURPRISE : #AjithKumar's latest picture from #Thunivu dubbing ! #ThunivuPongal2023 #THUNIVURageForPongal #ThunivuDubbing #AK #Ajithkumar𓃵 @BoneyKapoor #HVinoth @ManjuWarrier4 pic.twitter.com/QIadeGWaiy

— Galatta Media (@galattadotcom) November 4, 2022

துணிவு திரைப்பட டப்பிங்கில் #AjithKumar ! 💥#AjithKumar @BoneyKapoor #HVinoth #AK #Ajith #ThunivuPongal2023 #THUNIVURageForPongal #ThunivuDubbing #ThunivuUpdate pic.twitter.com/uis3GVqnHz

— Galatta Media (@galattadotcom) November 4, 2022