தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார்,எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.இதனை அடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK 62 படத்தில் நடிக்கவுள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

AK 61 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் ஹைதெராபாத்தில் ஆரம்பமாகியுள்ளது என்ற தகவலை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

வலிமை படத்தினை போல இந்த பத்தினையும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.நீரவ் ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த சில மாதங்களில் முடிக்கப்பட்டு 2022 தீபாவளிக்கு வெளியாகும் என்று எடிதிர்பார்க்கப்படுகிறது.