தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடித்து அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் வலிமை. சதுரங்கவேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான எச்.வினோத் நடிகர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரை உலகில் கவனிக்கப்படவேண்டிய இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார்.
 
இதையடுத்து நடிகர் அஜீத் குமாருடன் இணைந்த இயக்குனர் வினோத் பாலிவுட்டில் நடிகர் அமிதாப்பச்சன் டாப்சி இணைந்து நடித்து சூப்பர் ஹிட்டான பின்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இதனையடுத்து மீண்டும் தற்போது வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் வலிமை திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை திரைப்படத்தின் அப்டேட் களுக்காக அஜித் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் வெகுநாட்களாக காத்திருக்கும் நிலையில் வலிமை அப்டேட் என்பது தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டெஸ்ட் போட்டியில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தமிழக வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனிடம் தமிழக ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. உலகக் கோப்பை வரை சென்று வைரலான வலிமை அப்டேட் கேட்கும் அந்த வீடியோ கீழே உள்ள லிங்கில் காணலாம்.