ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது.

kaithi

இதனைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள். இதன் மூலம் ஹிந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள். 

ajaydevgan dreamwarriorpictures

தற்போது இந்த ரீமேக்கில் அஜய் தேவ்கன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கார்த்தி நடித்த டில்லி பாத்திரத்தில் அஜய் தேவ்கனை பார்க்க மிகுந்த ஆர்வத்தில் உள்ளது பாலிவுட் வட்டாரம். இப்படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும்.