உங்களை இயக்கும் நாள் வரும் என நினைத்ததே இல்லை!- சூப்பர் ஸ்டார் பற்றி எமோஷனலான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... லால் சலாம் பட புது GLIMPSE இதோ!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட லால் சலாம் பட புது GLIMPSE,aishwarya rajinikanth about rajinikanth at lal salaam shoot | Galatta

தனது தந்தையும் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் அவர்கள் குறித்து எமோஷனலாக பதிவிட்ட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 70 வயதை கடந்தும் இன்றும் குறையாத வேகத்தோடு தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 170-வது திரைப்படமாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் #தலைவர்170 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய TJ.ஞானவேல் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் நடிக்கும் தலைவர்170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

முன்னதாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகர்களாக திகழும் மோகன்லால் சுனில் சிவராஜ் குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து கிறார். லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் மற்றும் அதன் அரசியலை மையமாக வைத்த திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  மேலும் கிரிக்கெட் சார்ந்த திரைப்படம் என்பதால் திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான கபில் தேவ் அவர்கள் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்யும் லால் சலாம் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படப்பிடிப்பிற்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பார்ப்பதற்காக திரளான மக்கள் படப்பிடிப்பு தளத்திற்கு குவிந்தனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “நான் உங்களை பார்க்கிறேன்… உங்களை இயக்கும் நாள் வரும் என்று எப்போதும் நினைத்ததை இல்லை… நான் உங்களை வணங்குகிறேன்… சில நேரங்களில் உங்கள் வழியாக நான் பார்க்கிறேன்… நிறைய நேரங்களில் உங்களோடு இந்த உலகத்தை பார்க்கிறேன்… நீங்கள் தான் நான் என உணர்கிறேன்… ஒவ்வொரு நாளும் அப்பா இன்னும் இன்னும் அதிகம் உங்களை விரும்புகிறேன்…” என எமோஷனாக பதிவிட்டு இருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் அந்த பதிவு மற்றும் லால் சலாம் பட புது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ…
 

 

 

View this post on Instagram

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

“மாமன்னன் என் கடைசி திரைப்படம்..?”  இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின் – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

“மாமன்னன் என் கடைசி திரைப்படம்..?” இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின் – வைரல் வீடியோ உள்ளே..

வீரன் முதல் மாமன்னன் வரை.. ஜூன் மாதம் திரையரங்குகளில் படையெடுக்கும் முக்கியமான  திரைப்படங்கள்.. – சிறப்பு பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

வீரன் முதல் மாமன்னன் வரை.. ஜூன் மாதம் திரையரங்குகளில் படையெடுக்கும் முக்கியமான திரைப்படங்கள்.. – சிறப்பு பட்டியல் இதோ..

பிரம்மாண்ட அரங்கில் உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் - ARரஹ்மானின் மாமன்னன் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா! விவரம் இதோ
சினிமா

பிரம்மாண்ட அரங்கில் உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் - ARரஹ்மானின் மாமன்னன் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா! விவரம் இதோ