தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  கதாநாயகியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் திட்டம் இரண்டு (PLAN B).நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதிரா என்னும் கதாபாத்திரத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். 

சிக்ஸர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் மற்றும் மினி ஸ்டூடியோ தயாரிப்பாளர் வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ள திட்டம் இரண்டு (PLAN B) திரைப்படத்தை பிரபல ரேடியோ ஜாக்கியும் நடிகருமான விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார்.திட்டம் இரண்டு (PLAN B) திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய இசை அமைப்பாளர் சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். 

க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாரான திட்டம் இரண்டு (PLAN B) திரைப்படம் நேரடியாக சோனி லைவ் OTT தளத்தில் கடந்த ஜூலை 30ஆம் தேதி வெளியானது. விறுவிறுப்பான காட்சி அமைப்புகளும் யூகிக்க முடியாத திரைக்கதையும் கொண்ட திட்டம் இரண்டு திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் திட்டம் இரண்டு (PLAN B) திரைப்படத்திலிருந்து புதிய வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. உன் கன்னங்குழியில் என தொடங்கும் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெண்டாகும் இந்த அழகான  வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.