தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல மொழிகளிலும் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் திட்டம் இரண்டு (PLAN B).

பிரபல ரேடியோ ஜாக்கியும் நடிகருமான விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கியுள்ள திட்டம் இரண்டு (PLAN B) திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதிரா என்னும் கதாபாத்திரத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். சிக்ஸர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் மற்றும் மினி ஸ்டூடியோ தயாரிப்பாளர் வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். 

திட்டம் இரண்டு (PLAN B) திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய இசை அமைப்பாளர் சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் திட்டம் இரண்டு (PLAN B) திரைப்படம் நேரடியாக சோனி லைவ் OTT தளத்தில் வருகிற ஜூலை 30ஆம் தேதி வெளியாகிறது. 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து நடிகர்கள் பாவல் நவகீதன், கோகுல் ஆனந்த், ஜீவா ரவி, முரளி ராதாகிருஷ்ணன், சுபாஷ் செல்வம், அனன்யா ராம்பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் திட்டம் இரண்டு (PLAN B) திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகியுள்ளது. உன் கன்னங்குழியில் என தொடங்கும் இந்த அழகான மெலடி பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெண்டாகும் இந்த அழகான பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.