இயக்குனர் பா.ரஞ்சித்தின் அட்டகத்தி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகியாக அறியப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படத்திற்கு பிறகு சிறந்த கதாநாயகியாக சினிமா ரசிகர்கள் மனதில் பதிந்தார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்ததாக விஷால் கதாநாயகனாக நடிக்கும் மோகன்தாஸ் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தெலுங்கு & தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனா மற்றும் க/பெ.ரணசிங்கம் என கதாநாயகிகளை முன்னிறுத்தும் கதைகளிலும் நடித்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் திட்டம் இரண்டு. இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இத்திரைப்படத்தை சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் மற்றும் மினி ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் வினோத்குமார் இணைந்து தயாரிக்கின்றனர். 

கோகுல் பினாய் இசையில் சதீஷ்குமார் ஒளிப்பதிவில் தயாராகியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் நேரடியாக சோனி லைவ் தளத்தில் வெளியாக உள்ளது.இந்நிலையில் தற்போது திட்டம் இரண்டு படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விருவிருப்பான இந்த ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அசத்தலான ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.