சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் அடியெடுத்து வைத்து இன்று ரசிகர்கள் விரும்பும் நாயகியாக திகழ்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எதார்த்தமான ரோல், கிராமத்து பெண் வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

இப்போதைய ட்ரெண்டில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் விடுமுறையை கழிக்க தேர்ந்தெடுக்கும் ஸ்பாட்டாக மாலத்தீவு உள்ளது. சமீபத்தில் டிடி, விஷ்ணு விஷால், ரகுல் ப்ரீத் சிங் அங்கு சென்று தங்கள் விடுமுறையை கழித்தனர். இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். 

அங்கிருந்து ஜெட் ஸ்கையிங் செய்து இன்ஸ்ட்ராகிராம் ஸ்டோரியில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. மாலத்தீவில் கடல் மீது சிறிய ரக விமானத்தில் பயணிக்கும் வீடியோவை முன்பு பதிவிட்டிருந்தார். விடுமுறையை கழிக்க தான் மாலத்தீவை தேர்வு செய்துள்ளார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கா.பெ. ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. விருமாண்டி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக அரிய நாச்சி எனும் பாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா. 

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் பூமிகா படத்தில் நடித்து முடித்தார் ஐஸ்வர்யா. இயக்குனர் ரத்தின்திரன் ஆர். பிரசாத் இயக்கி வருகிறார். இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படமாகும். தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழில் ரீமேக்காகவுள்ளது. இயக்குனர் ஆர். கண்ணன் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

aishwarya rajesh shares jet skiing video from her maldives vacation trip