தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகைகளாக தங்களது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், பார்வதி மற்றும் லிஜோமொள் ஜோஸ் ஆகிய மூவரும் இணைந்து தற்போது HER எனும் புதிய மலையாள திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக தயாராகிவரும் நிலையில், ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் இணைந்து தீயவர் கைகள் நடுங்க படத்திலும், மலையாளத்தில் புலி மடா எனும் படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

நடிகை பார்வதி தமிழில் கடைசியாக நடித்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பலரது பாராட்டுக்களைப் பெற்ற நிலையில், அடுத்ததாக மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ள புழு திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

தமிழில் கடந்த ஆண்டு(2021) வெளிவந்து உலக அளவில் பாராட்டுக்களை வாரி குவித்த ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவனிக்க வைத்த நடிகை லிஜோமொள் ஜோஸ் மலையாளத்தில் புலி மடா மற்றும் விஷுதா மேஜோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக எழுத்தாளர் அர்ச்சனா வாசுதேவ் கதை திரைக்கதை வசனத்தில் இயக்குனர் லிஜின் ஜோஸ் இயக்கும் HER படத்தில் ஊர்வசி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா நம்பீசன், லிஜோமோல், பிரதாப் போத்தன், குரு சோமசுந்தரம் மற்றும் ராஜேஷ் மாதவன் ஆகியோர் நடிக்கின்றனர். சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவில் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை AT ஸ்டூடியோ தயாரிக்கிறது.

இந்நிலையில் HER திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த போஸ்டர் இதோ…