விஜய் தேவர்கொண்டா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் லுக் இதோ !
By Aravind Selvam | Galatta | December 12, 2019 18:11 PM IST

தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான Dear Comrade படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் ஹீரோ,வேர்ல்ட் பேமஸ் லவ்வர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ராஷி கண்ணா,ஐஸ்வர்யா ராஜேஷ்,கேத்ரின் தெரசா,இசபெல்லே லெய்ட் உள்ளிட்ட நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.கிராந்த்தி மாதவ் இந்த படத்தை இயக்குகிறார்.கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து படத்தில் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷின் லுக் அடங்கிய போஸ்ட்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.