ஒரே நாளில் ரிலீஸாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 2 படங்கள்... ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் அட்டகாசமான அறிவிப்பு இதோ!

ஐஸ்வர்யா ராஜேஷின் தி கிரேட் இந்தியன் கிச்சன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,the great indian kitchen movie new release date announced | Galatta

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக தொடர்ந்து தரமான படைப்புகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டிரைவர் ஜமுனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்த அடுத்த அசத்தலான படங்கள் வெளிவரவுள்ளன.

பாலிவுட்லும் களமிறங்கியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மாணிக் எனும் திரைப்படம் ஹிந்தி தயாராகியுள்ளது. மேலும் ஃபர்ஹானா, சொப்பன சுந்தரி, துருவநட்சத்திரம் மற்றும் தீயவர் கொலைகள் நடுங்க ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் & RJபாலாஜி உடன் இணைந்து நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படம் வரும் பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸாகவுள்ளது. 

இதனிடையே மலையாளத்தில் வெளிவந்து இந்திய சினிமாவில் பலரது கவனத்தையும் ஈர்த்த சூப்பர் ஹிட் திரைப்படமான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். RDC மீடியா நிறுவனம் தயாரித்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்ய, ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட் இசையமைத்துள்ளார். 

சக்தி பிலிம் ஃபேக்ட்ரி நிறுவனம் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், பின்னர் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி திரைப்படம் ரிலீஸாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் ரன் பேபி ரன் திரைப்படமும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Time to experience the hard-hitting tale of Indian women. The much-awaited #TheGreatIndianKitchen (Tamil) worldwide theatrical release on FEB 3.#TheGreatIndianKitchenFromFeb3

Directed by @Dir_kannanR
Produced by Durgaram Choudhary, Neel Choudhary pic.twitter.com/tiJAZynSeL

— RDC Media Pvt Ltd. (@RDCMediaPvtLtd) January 21, 2023

ஜவான் படத்தில் ஷாருக்கானின் நடிப்பு குறித்து முதல் முறை மனம் திறந்த அட்லீ! அதிரடி பதிவு இதோ
சினிமா

ஜவான் படத்தில் ஷாருக்கானின் நடிப்பு குறித்து முதல் முறை மனம் திறந்த அட்லீ! அதிரடி பதிவு இதோ

பரபரக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு… ட்ரண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!
சினிமா

பரபரக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு… ட்ரண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!

முற்றிலும் புதிய பரிமாணத்தில் யோகி பாபு - பா.ரஞ்சித்துடன் இணைந்த புதிய படத்தின் அட்டகாசமான GLIMPSE இதோ!
சினிமா

முற்றிலும் புதிய பரிமாணத்தில் யோகி பாபு - பா.ரஞ்சித்துடன் இணைந்த புதிய படத்தின் அட்டகாசமான GLIMPSE இதோ!