தென்னிந்திய திரையுலகின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் அமேசான் பிரைம் வீடியோவில் சஸ்பென்ஸ் த்ரில்லர் வெப்சீரிஸாக ரிலீஸான சுழல் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து வரிசையாக ஐஸ்வர்யா ராஜேஷின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து துருவநட்சத்திரம், மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் படம், விஷ்ணு விஷால் உடன் மோகன்தாஸ் உள்ளிட்ட படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரசிகர்களுக்காக வெளிவர காத்திருக்கின்றன

மேலும் வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் நடித்திருக்கும் டிரைவர் ஜமுனா & ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்துள்ள தீயவர் கொலைகள் நடுங்க படங்களும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக SG.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் சொப்பன சுந்தரி.

ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், சதீஷ், ரெட்டின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் சொப்பன சுந்தரி படத்தை ஹம்சினி என்டர்டைன்மென்ட் மற்றும் ஹூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.

பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ள சொப்பன சுந்தரி படத்திற்கு K.சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, அஜ்மல் தசீன் மற்றும் சிவாத்மிகா இணைந்து இசை அமைத்துள்ளனர். இந்நிலையில் சொப்பன சுந்தரி திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

#SoppanaSundari Shoot Wrapped up Successfully today🎉 Post Production Works on full Swing 🔥#SoppanaSundari 👸Coming to Theaters Veryyy Soonnn@aishu_dil @LakshmiPriyaaC #deepa #Karunakaran @mimegopi @dancersatz #Sunil @Bjornsurrao @SGCharles2 @Hamsinient @HueboxS pic.twitter.com/VV8LcJbbkO

— Yuvraaj (@proyuvraaj) September 23, 2022