தேர்ந்த நடிகையாக தொடர்ந்து பலவிதமான கதை களங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தரமாக நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து துருவநட்சத்திரம் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் படம், விஷ்ணு விஷால் உடன் மோகன்தாஸ், வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் நடித்திருக்கும் டிரைவர் ஜமுனா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து நடித்துள்ள தீயவர் கொலைகள் நடுங்க மற்றும் SG.சார்லஸ் இயக்கத்தில் நடித்துள்ள சொப்பன சுந்தரி என ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. 

இந்த வரிசையில் அடுத்ததாக, ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி கைதி என தொடர்ந்து சிறந்த படைப்புகளை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் ஃபர்ஹானா. ஒரு நாள் கூத்து , மான்ஸ்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஃபர்ஹானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் மற்றும் ஜித்தன் ரமேஷ் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கோகுல் பினாய் ஒளிப்பதிவில், VJ சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ள ஃபர்ஹானா திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் ஃபர்ஹானா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்பு வெளியாகி உள்ளது. சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Meet #Farhana, a woman of strength and confidence and a picture of elegance!! A character crafted to perfection by director Nelson Venkatesan!! Very proud to release this first look!!@selvaraghavan @JithanRamesh @justin_tunes @gokulbenoy @EditorSabu @nelsonvenkat @prabhu_sr pic.twitter.com/15Me7oHxhg

— aishwarya rajesh (@aishu_dil) October 5, 2022