தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் திட்டம் இரண்டு. கிரைம் திரில்லர் படமாக வெளிவந்த திட்டம் இரண்டு திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த திரைப்படமான பூமிகா இன்னும் சில தினங்களில் ரிலீஸாகிறது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் உருவாகி இருக்கும் பூமிகா திரைப்படத்தை இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கியுள்ளார். முன்னதாக இயக்குனர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் வெளிவந்த நவரசாவில் நடிகர்கள் சித்தார்த் மற்றும் பார்வதி நடித்த இன்மை எனும் எபிசோடை ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கியுள்ளார்.

பூமிகா திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து நடிகை அவந்திகா மற்றும் நடிகர் பாவல் நவகீதன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் படமாக தயாராகி இருக்கும் பூமிகா திரைப்படம் விஜய் டிவியில் நேரடியாக வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அறிவிக்கும் விதமாக புதிய ட்ரைலர் இன்று வெளியானது. பரபரப்பான அந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

அடுத்ததாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஐய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும்  கிரேட் இந்தியன் கிட்சன் மலையாள படத்தின் ரீமேக்காக தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் திரைப்படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.