தமிழ் திரையுலகில் தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர், தனது அட்டகாசமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளார். முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். எதார்த்தமான ரோல், கிராமத்து பெண் வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துவார் ஐஸ்வர்யா. 

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். டக் ஜெகதீஷ் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் திட்டம் இரண்டு என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ரத்தின்திரன் ஆர். பிரசாத் இயக்கவிருக்கும் பூமிகா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியானது. 

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ஹாரர் திரில்லரான இப்படத்திற்கு ராபர்ட்டோ ஒளிப்பதிவு செய்கிறார். பிரித்வி சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆனந்த் ஜெரால்டின் எடிட்டிங் செய்கிறார். டான் அசோக் ஸ்டண்ட் பணிகள் மேற்கொள்கிறார். 

விருமாண்டி இயக்கத்தில் வெளியான  கா.பெ. ரணசிங்கம் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக அரிய நாச்சி எனும் பாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். Zeeplex தளத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி இந்த வெளியான இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. 

இந்நிலையில் தீபாவளி கொண்டாடி ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சற்றும் பயம் இல்லாமல் வாலா வெடியை வைத்து கொண்டாடுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த இந்த வீடியோ அதிக லைக்குகளை குவித்து வருகிறது.