தமிழ் திரையுலகில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து அசத்துபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த ஆண்டு சிவகார்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான வானம் கொட்டட்டும் படத்திலும் சீரான நடிப்புடன் ஜொலித்தார். 

aishwaryarajesh

இந்நிலையில் தனது சகோதரர் மணிகண்டனின் பிறந்தநாளை கொண்டாடினார் ஐஸ்வர்யா ராஜேஷ். மணிகண்டன் பிரபல சீரியல் நடிகரும் கூட. பிறந்தநாள் கொண்டாடியதை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Manikandanrajesh aishwaryarajesh

தமிழ் மொழி படங்கள் அல்லாது தெலுங்கிலும் பிஸியாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தை தொடர்ந்து டக் ஜகதீஷ் எனும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் கா.பெ.ரணசிங்கம் படத்தில் நடித்து வருகிறார்.