தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கடைசியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான திட்டம் இரண்டு த்ரில்லர் திரைப்படம் நேரடியாக சோனி லைவ் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஐய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும்  கிரேட் இந்தியன் கிட்சன் மலையாள படத்தின் ரீமேக்காக தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் திரைப்படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகியிருக்கும் மோகன்தாஸ் மற்றும் சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பூமிகா . பூமிகா நேரடியாக விஜய் டிவியில் வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பூமிகா திரைப்படத்தை ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கியுள்ளார்.  இசையமைப்பாளர் ப்ரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பூமிகா படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது .ஆண்ட்ரியா குரலில் வெளியாகியுள்ள அழகான அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.