திரையுலகில் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர், தனது அட்டகாசமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ். எதார்த்தமான ரோல், கிராமத்து பெண் வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துவார் ஐஸ்வர்யா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. இந்த வருடம் கொரோனா காரணமாக படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் இருந்தாலும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கா.பெ. ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. விருமாண்டி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக அரிய நாச்சி எனும் பாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா. Zeeplex தளத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி இந்த வெளியான இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. 

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கடைசியாக தீபாவளி கொண்டாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். சற்றும் பயம் இல்லாமல் வாலா வெடியை வைத்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் லாக்டவுனில் குறும்படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஷாரதா ராமநாதன் இயக்கத்தில் உருவான நான்கு நிமிட குறும்படமாகும். அஸ்வின் காக்குமனு முக்கிய ரோலில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த குறும்படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்வாதி பாடல் வரிகள் எழுதியுள்ளார். இதன் மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. 

ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் பூமிகா திரைப்படம் உள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ரத்தின்திரன் ஆர். பிரசாத் இயக்கி வருகிறார். இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியானது. ஹாரர் திரில்லரான இப்படத்திற்கு ராபர்ட்டோ ஒளிப்பதிவு செய்கிறார். பிரித்வி சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆனந்த் ஜெரால்டின் எடிட்டிங் செய்கிறார். டான் அசோக் ஸ்டண்ட் பணிகள் மேற்கொள்கிறார்.