தனது விடாமுயற்சியாலும் தனது வித்தியாசமான கதைத்தேர்வின் மூலமும்  தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து அசத்தி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா.

ஹீரோயினாக மட்டுமல்லாமல் தனது கதாபாத்திரத்துக்கு வெயிட்டான படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார்.

இவர் நடிப்பில் அடுத்த்தாக துருவ நட்சத்திரம்,டிரைவர் ஜமுனா,மோகன்தாஸ்,Tuck Jagadish மற்றும் சில ரிலீசுக்கு ரெடி ஆகி வருகிறது.இவரது திட்டம் இரண்டு,பூமிகா உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்று வந்தது.அடுத்ததாக இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

GS ARTSதயாரிப்பில் G அருள் குமார் வழங்கும் படத்தினை தினேஷ்  லக்ஷ்மணன்  இயக்குகிறார்.ஆக்‌ஷன் கிங் அர்ஜீன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்,க்ரைம் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய  பிரபலங்கள்  நடிக்கின்றனர்.