ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது !
By | Galatta | July 12, 2020 16:27 PM IST
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் பாதையிலிருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு பலரும் இந்த வைரஸின் தாக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்,பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் என்று யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.பல பிரபலங்களும் இந்த வைரஸ் தாக்கி தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே கொரோனா டெஸ்ட் எடுத்து கொண்டதாகவும் அதில் தனக்கு பாசிட்டிவ் என்று வந்துள்ளது என்றும் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.மேலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தன்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன்வந்து டெஸ்ட் எடுத்துக்கொண்டு ,தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு , பத்திரமாக இருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி வந்த சில மணி நேரங்களில் அவரது மகனும் ஹிந்தி நடிகருமான அபிஷேக் பச்சன் தனக்கும் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.தனக்கும் தந்தைக்கும் லேசான சிம்ப்டங்கள் இருந்ததாகவும் டெஸ்ட் செய்த பின் ஹாஸ்பிடலில் இருப்பதாகவும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் டெஸ்ட் எடுக்கப்படுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.அனைவரும் படத்தப்படமால் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயா பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தகவலை மகாராஷ்டிரா ஹெல்த் மினிஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தி ஹிந்தி திரையுலகினர் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா நோய் தொற்று யாருக்கு வேண்டுமாலனும் வரும் என்பதும் இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.இதனையடுத்து இந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று பல பிரபலங்களும்,ரசிகர்களும் தங்கள் பிராத்தனைகளை ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக அனைவரும் விரைவில் நல்ல உடல்நலத்தோடு குணமாகி வீடு திருமபவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.
Viral Video: Kadhai + Thiraikadhai + Vasanam + Iyakkam - Thalapathy Vijay
12/07/2020 01:38 PM
National Award Winning Legendary Actor's Family Tested Positive for Corona Virus
12/07/2020 12:18 PM