தென்னிந்திய திரையுலகின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தற்போது சினிமா ரசிகர்களின் இதயங்களை பூங்குழலியாக கொள்ளையடித்துள்ளார். இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா லெக்ஷ்மியை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் இணைந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கேங்ஸ்டர் படமாக தயாராகும் கிங் ஆஃப் கோத்தா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். கிங் ஆஃப் கோத்தா படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த வரிசையில் அடுத்ததாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் அம்மு. நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ட்ரிப்பிள்ஸ் வெப் சீரிஸின் இயக்குனர் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ள அம்மு படத்தில் நவீன் சந்திரா மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வழங்க, தெலுங்கில் தயாராகியுள்ள அம்மு திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் அம்மு திரைப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், அம்மு திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. கவனம் ஈர்க்கும் அந்த ட்ரைலர் இதோ…