பண்டிகைய கொண்டாடுங்கடே.. துணிவு பட வெற்றியையடுத்து வெளியானது AK 62 படத்தின் புதிய அப்டேட் – உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

துணிவு பட வெற்றியையடுத்து வெளியானது AK 62 படத்தின் புதிய அப்டேட்- AK 62 OTT rights bagged by netflix | Galatta

பொங்கலையொட்டி கடந்த ஜனவரி 11 ம் தேதி வெளியான அஜித் நடித்த துணிவு படம் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ளது. பொங்கல் விடுமுறையடுத்து ரசிகர்களும் மக்களும் நாளுக்கு நாள் படத்திற்கான வரவேற்பை கொடுத்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து எச். வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தை பல இடங்களில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  AK62 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள அஜித் அவர்களின் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கவுள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது.  துணிவு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததால் AK62 ற்கான தகவல்கள் பெரிதாக எதுவும் வெளியாகவில்லை.

தற்போது துணிவு படம் வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் AK 62 படத்திற்கான அப்டேட் வெளியானது. அஜித் குமார், விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகவிருக்கும் AK 62 படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல ஒடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம். இதுகுறித்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில், நாங்கள் Chilla chilla வாக இருக்க முயற்சித்தோம். ஆனால் எங்களால் இருக்க முடியவில்லை. AK 62  திரைப்படம் திரையரங்கு வெளியீட்டுக்கு பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நெட்பிளிக்ஸ் - ல் வெளியாகவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

We tried to stay CHILLA CHILLA but we just CANNOT! 🤩🤩#AK62 is coming on Netflix in Tamil, Telugu, Malayalam and Kannada as a post theatrical release! 🔥#NetflixPandigai #AK62 #NetflixLaEnnaSpecial pic.twitter.com/LWrBYY1eBY

— Netflix India South (@Netflix_INSouth) January 16, 2023

இதனையடுத்து துணிவு வெற்றி உற்சாகத்தில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அப்டேட் வெளியாகியதில் ரசிகர்கள் குதூகலம். நெட்ப்ளிக்ஸ் பகிர்ந்துள்ள AK 62 படத்திற்கான இந்த அப்டேட் தான் தற்போது வைரல். மேலும் AK 62 படத்தின் படபிடிப்பு வரும் மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது விக்னேஷ் இயக்கவுள்ள இப்படத்தில் அரவிந்த் சாமி, சந்தானம் நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா அல்லது திரிஷாவை நடிக்க வைக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் பேசி வருகிறது என்னை அறிந்தால் – ‘அதாறு அதாறு’ , வலிமை – ‘அம்மா பாடல்’, ‘நாங்க வேற மாதிரி’ போன்ற பாடல்களுக்கு பாடலாசிரியாக ஏற்கனவே அஜித் திரைப்படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின் விஜய் சேதுபதி நடிப்பில் ‘நானும் ரௌடி தான்’ படத்தை இயக்கி பிரபலமடைந்தார். அதன் பின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ , ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களை இயக்கியவர். மேலும் பாடலாசிரியாரகாவும் தயாரிப்பாளராகவும் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலிவுட்டில் கெத்து காட்டும் விஜய் சேதுபதி – வெளியானது ஃபர்ஸி தொடர் டிரைலர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

பாலிவுட்டில் கெத்து காட்டும் விஜய் சேதுபதி – வெளியானது ஃபர்ஸி தொடர் டிரைலர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

நான் நல்லாத்தான் யா இருக்கேன்! – வதந்திக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி ஹாசன்..
சினிமா

நான் நல்லாத்தான் யா இருக்கேன்! – வதந்திக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி ஹாசன்..

“இப்படி வைரலாகும்னு நினைக்கல” – காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பொன்னியின் செல்வன் பூங்குழலி .. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“இப்படி வைரலாகும்னு நினைக்கல” – காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பொன்னியின் செல்வன் பூங்குழலி .. வைரலாகும் பதிவு இதோ..