இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ஓவியா மற்றும் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் களவாணி 2. சில வருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம் இது. அதுமட்டுமல்லாமல் நடிகர் விமலின் 25-வது படம் இது. 

After Thala Its Vemal For Satellite Rights In Zee Television

முதற் பாகம் போலவே இந்த படமும் கிராமத்து வாசனையுடனும், நகைச்சுவையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தரமான படத்தில் நடிப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது களவாணி 2. படத்திலிருந்து ஆனந்த கூச்சல் பாடல் வீடியோ சமீபத்தில் வெளியானது. மணி அமுதவானன் இந்த பாடலை எழுதியிருந்தார்.

After Thala Its Vemal For Satellite Rights In Zee Television

தற்போது படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை Zee தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது எனும் விவரம் தெரியவந்தது. ஏற்கனவே அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் உரிமையும் zee தமிழ் தான் கொண்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

After Thala Its Vemal For Satellite Rights In Zee Television