அடுத்த சாட்டை படத்தின் புதிய வீடியோ காட்சி வெளியானது !
By Sakthi Priyan | Galatta | November 29, 2019 15:11 PM IST

கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி பட்டையை கிளப்பிய படம் சாட்டை. இப்படம் அரசு பள்ளி மாணவர்களின் பிரச்சனைகளை பேசிய படமாகும். அன்பழகன் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த சாட்டை என்று உருவாகியுள்ளது.
இந்த முறை கல்லூரி மாணவர்களின் பிரச்சனைகளை பேசியிருப்பதாக தெரிகிறது. இதில் சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, யுவன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை 11:11 புரொடக்ஷன் நாடோடிகள் ஃபிலிம்ஸ், ஸ்ரீ வாரி ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது.