பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக விருமன் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.எம் பி பி எஸ் முடித்து டாக்டர் பட்டம் பெற்ற பின் சினிமா,நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் நடிகையாக முடிவு செய்தார்.தெலுங்கில் தமன் இசையமைத்த காணி படத்தில் ஒரு பாடலை பாடி சினிமாவில் என்ட்ரி கொடுத்த அதிதி.

அடுத்ததாக கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தில் மதுர வீரன் என்ற பாடலை பாடியும் அசத்தியுள்ளார் அதிதி.

முதல் படம் வெளியாகும் முன்னரே அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் அதிதி.இந்த படத்தினை மண்டேலா இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

விருமன் பட ரிலீஸை முன்னிட்டு நமது கலாட்டா சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதிதி ஷங்கர்.சமீபத்தில் நடந்து முடிந்த விருமன் இசைவெளியீட்டு விழாவில் பேசும் போது கார்த்தியை மறந்து விட்டார் ஷங்கர் தான் நியாபகப்படுத்தினார் என்று பலரும் கூறி வந்தனர்.

இதற்கு விளக்கமளித்த அதிதி நான் கார்த்தியை மறக்கவில்லை ,அவரை பற்றி கடைசியாக பேச வேண்டும் என்று ரெடியாக தான் இருந்தேன் அதற்குள் அனைவரும் நான் அவரை மறந்துவிட்டேன் என்று நினைத்து விட்டார்கள்.அப்பாவும் ரசிகர்களை போல மறந்துவிட்டேன் என்று நினைத்து நினைவு படுத்தினார்,ஆனால் நான் மறக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.