கடந்த 2017-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் சீரான நடிப்பை வெளிப்படுத்தினார் அதிதி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிறமொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

aditiraohydari

இந்நிலையில் நடிகை அதிதி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் தளபதி விஜய்யுடன் எப்போ நடிக்கப்போகிறீர்கள் என கேட்க, அதற்கு அவர் இதனை தளபதி விஜய்யிடம் கேளுங்கள் என்று ஜாலியாக கூறியுள்ளார். 

aditiraohydari

டெல்லி பிரசாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் இணைந்து துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஹே சினாமிகா படத்தில் நடிக்கவுள்ளார்.