மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் சீரான நடிப்பை வெளிப்படுத்தினார் அதிதி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிறமொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

Aditi Rao Hydari Sufiyum Sujatayum Official Trailer Jayasurya Aditi Rao Hydari Sufiyum Sujatayum Official Trailer Jayasurya

இந்நிலையில் அதிதி ராவ் நடித்த சுஃபியும் சுஜாதாயும் மலையாள திரைப்பட ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் தனுஷ் இந்த ட்ரைலரை வெளியிட்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக அமேசான் ப்ரைமில் வரும் ஜூலை 3-ம் தேதி வெளியாகவுள்ளது. 

Aditi Rao Hydari Sufiyum Sujatayum Official Trailer Jayasurya Aditi Rao Hydari Sufiyum Sujatayum Official Trailer Jayasurya

நரணிபுழா ஷானவாஸ் இயக்கும் இந்த படத்தில் ஜெயசூர்யா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ளார். அணு மூதேதத் ஒளிப்பதிவு செய்துள்ளார். லாக்டவுன் சீசனில் ஓடிடி-ல் வெளியாகும் திரைப்படங்களுக்கு இணையவாசிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.