சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன்.விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளியினான இவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் சங்கத்தலைவன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஓகே கண்மணி,கேம் ஓவர்,ஆடை உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.மேலும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கொரோனா காரணமாக அவ்வப்போது தனது ரசிகர்களுடன் லைவ்வில் பேசியும்,அவர்களுக்கு உடற்பயிற்சி குறித்தும் இவர் தனது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்வார்.அவ்வப்போது டிக்டாக் செய்தும் தனது
திறமையை வெளிப்படுத்தி வந்தார் ரம்யா.

இவரது டிக்டாக் விடீயோக்களும்,இன்ஸ்டாகிராம் போஸ்டுகளும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.இவர் போடும் விடீயோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகின்றன.உடற்பயிற்சி குறித்தும்,மேக்கப் குறித்தும் அவ்வப்போது விடீயோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வருவார் ரம்யா.

இந்த லாக்டவுன் நேரத்தில் ஸ்ட்ரிக்ட் ஆக டயட் இருந்து உடம்பை குறைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியுள்ளேன் என்று லாக்டவுனுக்கு முன்னால் எடுத்த புகைப்படங்களையும்,இப்போதுள்ள புகைப்படங்களையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.இந்த லாக்டவுன் நேரத்தில் 5 கிலோக்களை குறைந்துள்ளதாக சில நாட்களுக்கு முன் அவர் பெருமையாக பதிவிட்டிருந்தார்.மேலும் இவரது சிலம்பம் வீடியோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.தற்போது தனது புதிய ஒர்க்கவுட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரம்யா.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

View this post on Instagram

Your motivation to start being active stems from finding an activity that you truly enjoy . It should make you addicted , want you to wake up in the morning ( even at 4:30am 🤪) and go for it with full enthusiasm and energy 😍🥰! Some enjoy running 🏃🏻‍♀️ Some like dancing 💃🏻 Some like 🏋🏻‍♀️ And some like a sport 🏸 🏏 🎾 🏈. After a long break due to the injury , I was so looking forward to picking myself and get some movement in and today was pure bliss . We played for two hours straight and I realised at the end of the game that I had burnt 600 calories and still dint feel the exhaustion 😅🙌🏻🤙🏻🙏🏻. . #SelfCareSunday #AdrenalineJunkie #ExerciseMotivations

A post shared by Stay Fit With Ramya (@stayfitwithramya) on