சூப்பர்ஹிட் தொடரில் என்ட்ரி தரும் பிரபல நடிகை !
By Aravind Selvam | Galatta | January 24, 2022 11:27 AM IST
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று கண்ணான கண்ணே.ராகுல் ரவி இந்த தொடரின் நாயகனாக நடித்து அசத்தி வருகிறார்.நிமேஷிகா ராதாகிருஷ்ணன் இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இவர்களுடன் பப்லு ப்ரித்விராஜ்,அக்ஷிதா போபையா,மானஸ்,ப்ரியா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.இந்த தொடருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் நடித்து வரும் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக மாறியுள்ளனர்.
வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பான இந்த தொடர் தொடக்கத்தில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.பல அதிரடி திருப்பங்களுடன் சென்று வரும் இந்த தொடர் விரைவில் 400 எபிசோடுகளை எட்டவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நித்யாதாஸ் சில நாட்களுக்கு முன் விலகினார்.இவர் விலகியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.தற்போது இவருக்கு பதிலாக பிரபல நடிகை வினோதினி இந்த தொடரில் புதிய யமுனாவாக இணைந்துள்ளார்,இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.