கடந்த 2012-ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்தவர் வித்யூ ராமன். தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் காமெடியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல குணச்சித்திர நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் அதிக அளவு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது. எங்கள் ரோகா விழா கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி மிகவும் அழகாக நடந்து முடிந்தது. அதில் நெருக்கமான குடும்ப உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

இதற்காக எங்களுக்கு கிடைத்த வாழ்த்துக்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். நாங்கள் மாஸ்க் அணிந்து தான் இதில் பங்கேற்றோம். போட்டோ எடுப்பதற்காக அதை நீக்கி இருக்கிறோம். யாரும் இந்த கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகத் தான் இதைக் குறிப்பிடுகிறேன். எங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி என வித்யூலேகா பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இந்த அழகான தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

சமீபகாலமாக உடல் எடையை குறைப்பதில் அதிக அளவில் கவனம் செலுத்தி வந்தார் வித்யூ லேகா. அது பற்றி அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டு வருகிறார். வித்யூலேகா திருமணம் செய்துகொள்ள உள்ள சஞ்சய் என்பவரும் உடல் எடையை குறைப்பதற்கான கீடோ பொருட்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நபர் என்பது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தினை பார்க்கும்போதே தெரிகிறது. மேலும் அவர் அந்த பொருட்களை விற்பனை செய்யும் பணியையும் செய்கிறார் என்று அவரது இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வித்யூவின் தந்தை மோகன் ராம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவிருக்கிறார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது. கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய், த்ரிஷா ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.