இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத பிரம்மாண்டப் திரைப்படமாக தயாராகிறது பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கலை இயக்கத்தை இந்தியாவின் சிறந்த கலை இயக்குனர் தோட்டா தரணி மேற்கொள்ள ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பொன்னியின் செல்வனின் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யாராய், குந்தவையாக திரிஷா, சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமா, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி என முன்னணி கதாபாத்திரங்களில் முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

பரபரப்பாக நடைபெற்று வரும் பொன்னியின்செல்வன் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நேற்று மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில் உள்ள ஆர்சாவில் தொடங்கியது. இந்நிலையில் நடிகை த்ரிஷா ஆர்சாவில் படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
actress trisha shared shooting spot photo from mani ratnam ponniyin selvan