இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகியாக உயர்ந்து நிற்கிறார் நடிகை டாப்ஸி. தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி தமிழில் நடிகர் தனுஷ் நடித்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகுந்த பிரபலமடைந்தார். தொடர்ந்து தமிழில் வந்தான் வென்றான், ஆரம்பம்  போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த  டாப்ஸி பாலிவுட் திரை உலகில் காலடி எடுத்து வைத்த பிறகு இந்திய அளவில் மிகப்பெரிய கதாநாயகியாக உருவெடுத்தார்.

குறிப்பாக நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து பிங்க் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த கதாநாயகிகளின் பட்டியலில் இடம் பிடித்தார் டாப்ஸி. காசி அட்டாக், மிஷன் மங்கள் ,தப்பட்  என தொடர்ச்சியாக ஹிந்தியில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் .

தமிழ் தெலுங்கு மொழிகளில் டாப்ஸி நடித்த கேம் ஓவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில்  டாப்ஸி நடித்து வெளிவர உள்ள புதிய த்ரில்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் ஆனந்த்.L.ராய் தயாரிக்கும் ஹஸீன் தில்ரூபா  படத்தை இயக்குனர் விணில் மேத்யூ இயக்க  அமிட் டிரிவெதி இசையமைத்திருக்கிறார். 

நெட்ப்ளிக்ஸ்-ல் இத்திரைப்படம் நேரடியாக  வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் ஹஸீன் தில்ரூபா  படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை டாப்ஸி உடன் இணைந்து ஹன்சிகா மோட்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹஸீன் தில்ரூபா திரைப்படம் வருகிற ஜூலை 2ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகிறது. த்ரில்லர் திரைப்படமாக வெளிவர உள்ள ஹஸீன் தில்ரூபா திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.