இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து தமிழில் வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் , தெலுங்கு, இந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

கடைசியாக நடிகை டாப்ஸி நடித்து தமிழில் வெளியான திரைப்படம் கேம் ஓவர், மிரட்டலான த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து டாப்ஸி நடித்து வெளிவந்த PINK திரைப்படம் இந்திய அளவில் மெகா ஹிட்டானது. 
 
இதனையடுத்து, தொடர்ந்து பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை டாப்ஸி நடிப்பில் உருவான ஹஸீன் தில்ரூபா திரைப்படம் கடந்த ஜூலை 2ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. இந்நிலையில் டாப்ஸி நடிக்கும் அடுத்த புதிய திரைப்படம் குறித்த தகவல் இன்று வெளியானது. 

மேட்னி என்டர்டெயின்மென்ட்  சார்பில் நிரஞ்சன் ரெட்டி மற்றும் அபினேஷ் ரெட்டி இணைந்து தயாரிக்கும் மிஷன் இம்பாசிபிள் எனும் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிகை டாப்ஸி கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல இயக்குனர் ஸ்வரூப்.R.S.J. எழுதி இயக்கியுள்ள மிஷன் இம்பாஸிபிள் திரைப்படத்திற்கு மார்க்.K.ராபின் இசையமைக்கிறார். 

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மேட்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியானது. விரைவில் மிஷன் இம்பாசிபிள் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.