சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட் அடித்து வரும் தொடர் வானத்தைப்போல.அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது.தமன் குமார்,தேபாஜினி,ஸ்வேதா கெல்ஜே உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் திலக்,ப்ரீத்தி குமார்,மௌனிகா,செந்தில் குமாரி,மகாநதி ஷங்கர் மற்றும் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.இந்த தொடர் 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்வேதா கெல்ஜே.நாயகனின் தங்கையாக நடித்து வந்த இவர் தனது நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் இந்த சீரியலில் இருந்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார்.தனக்கு இதனை நாட்களாக ஆதரவளித்து வந்த அனைவருக்கும் நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.நன்றாக நடித்து அசத்தி வந்த இவர் திடீரென விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

actress swetha khelge quits as thulasi from vaanathai pola serial