கொரோனாவில் இருந்து மீண்டு வந்த சுனைனாவின் முதல் பதிவு இதுதான்!
By Anand S | Galatta | May 18, 2021 13:25 PM IST
கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது. தினசரி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கிட்டத்தட்ட 300 பேர் தினசரி உயிரிழக்கும் வரும் செய்திகள் மனதை வேதனைக்கு உள்ளாக்குகிறது.தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் ஒவ்வொருவராக தற்போது குணமடைந்து மீண்டு வருவதையும் நாம் பார்க்கிறோம்.
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்குதலின் சில அறிகுறிகள் தென்பட்ட நிலையில் நடிகை சுனைனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையின் முடிவில் நோய் தொற்று இருப்பது உறுதியானது. வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மருத்துவர்களின் முழு மருத்துவ ஆலோசனைப்படி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த நடிகை சுனைனா தற்போது உடல் நலம் பூரண குணமடைந்து மீண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை சுனைனா
“மருத்துவர்கள் ஆலோசனைப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இருந்து தற்போது பூரண குணமடைந்து மீண்டு வந்துள்ளேன்.
எனக்காக பிரார்த்தனை செய்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மோசமான கால கட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
அன்புடன் சுனைனா”
என தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சுனைனா தெரிவித்துள்ளார்.
இந்த மோசமான கால கட்டத்தில் நாம் அனைவரும் மருத்துவர்களின் முழு ஆலோசனைகளையும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி எம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக இருப்போம்.
— SUNAINAA (@TheSunainaa) May 17, 2021