சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதையடுத்து ஜீவா, வெள்ளக்கார துரை, ஈட்டி, காஷ்மோரா, மருது என வரிசையாக நடித்து அசத்தினார். 

Sridivya

கொரோனா நோயினால் மிருகங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று சில நாட்கள் முன்பு கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நியூயார்க் பகுதியில் இருக்கும் வனவிலங்கு காப்பகத்தில் இருக்கும் 4 வயது புலிக்கு கொரோனா நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பணி செய்பவர்களிடம் இருந்து அந்நோய் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

SriDivya sridivya

இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஸ்ரீதிவ்யா கொரோனா புது அவதாரம் எடுக்கிறது, அதிக கவனம் தேவை..  யாரும் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். முன்னெச்சரிக்கையாக இருங்கள் என்று பதிவு செய்துள்ளார் ஸ்ரீ திவ்யா.