சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படமான தர்பார் படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். இதற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியது. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

rajinikanth

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு முடிவடைந்ததென பதிவு செய்துள்ளனர் லைக்கா நிறுவனம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது என அனிருத் தெரிவித்திருந்தார். முழுவீச்சில் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

darbar

shreya

தற்போது தர்பார் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஸ்ரேயா வருகை தந்த புகைப்படம் நம் பார்வைக்கு எட்டியது. இதனால் நடிகை ஸ்ரேயா கௌரவ தோற்றத்தில் நடிக்கிறாரா ? அல்லது ஏதேனும் பாடல் காட்சிக்கு நடனமாடுகிறாரா என்ற ஆவலில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்திருந்தார் ஸ்ரேயா.