தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கடைசியாக நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை சினேகா முன்னணி தொலைக்காட்சிகளிலும் நிறைய ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பங்கு பெற்று வருகிறார். அடுத்ததாக தமிழ் சினிமாவில் வான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் பிரசன்னா அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் நெட்ஃபிலிக்ஸில் நேரடியாக வெளியாகும் நவரச வெப் சீரிஸில் ப்ராஜெக்ட் அக்னி என்னும் எபிசோடில் நடிகர் அரவிந்த்சாமி உடன் இணைந்து நடித்து வருகிறார்.  கடைசியாக நடிகர் பிரசன்னா கார்த்திக் நிறைய இயக்கத்தில் வெளியான மாஃபியா வில்லனாக நடித்திருந்தார் தொடர்ந்து துப்பறிவாளன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சினேகா இன்று  கொரோனா  தடுப்பூசி எடுத்துக்கொண்டார். கணவர் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் போது செய்த சேட்டையான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.