விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக பாடி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் சௌந்தர்யா. தொடர்ந்து திரைப்படங்களிலும் பின்னணி பாடகியாக சில பாடல்கள் பாடியுள்ள சவுந்தர்யா பல  குறும் படங்களிலும் விஜய் தொலைக்காட்சியின் தொடர்களிலும் நடித்துள்ளார். தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி ஆசிரியராக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை பாடகி சௌந்தர்யா இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் மிகவும் பிரபலம். இவரை பல ரசிகர்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு கல்லூரியின் பேராசிரியர் இவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ்கள் அனுப்பியுள்ளார். அதில் மிகவும் ஆபாசமாக பேசியிருக்கிறார். மிகவும் கொச்சையாக நடிகை சௌந்தர்யாவை படுக்கைக்கு அழைத்து மெசேஜ்களை அனுப்பியுள்ள அந்த கல்லூரி பேராசிரியரின் திரையைக் கிழித்து வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் சௌந்தர்யா. 

actress singer soundharya exposes the man who sent sexual messages

அந்த நபர் அனுப்பிய அனைத்து குறுந்தகவல்களையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம்-இன் ஸ்டேட்டஸ் பகுதியில் வைத்து அனைவருக்கும் எச்சரிக்கை செய்துள்ளார். இதில் அந்த கல்லூரியில் இருப்பவர்களும் அவரிடமிருந்து மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள சௌந்தர்யா, அவரை இன்ஸ்டாகிராமில் BLOCK செய்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் வந்திருக்கக்கூடிய புதிய அப்டேட்டில் அந்த BLOCK செய்யப்பட்ட நபர் வேறு ஒரு புதிய கணக்கு துவங்கினாலும் அதுவும் BLOCK ஆகிவிடும் என்பதை மேற்கோள்காட்டி கூறியிருக்கிறார். 

actress singer soundharya exposes the man who sent sexual messages actress singer soundharya exposes the man who sent sexual messages actress singer soundharya exposes the man who sent sexual messages

தனக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பிய இந்த கல்லூரி பேராசிரியரின் முகத்தை உலகிற்கு காட்டிய சௌந்தர்யாவை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள் பெண்களுக்கு இதுபோன்ற அநியாயங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. நிறைய பெண்கள் இதை வெளி உலகத்திற்கு சொல்லாமல் மறைத்து விடுகிறார்கள் அல்லது பயந்து விடுகிறார்கள். சௌந்தர்யாவை போல மற்ற பெண்களும் முன்வந்து அவர்களுக்கு நடக்கும் அநீதியை பற்றி பேசவேண்டும் என்பது பலரின் கருத்தாகவும் காணப்படுகிறது.