கடந்த 2006-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து நடித்த இந்த படம் ரசிகர்களின் ஃபேவரைட்டாக திகழ்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக நடித்த ஸ்ரேயா சர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. 

தெலுங்கில் வெளியான காயகுடு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரேயா அதைத்தொடர்ந்து பில்லு கேமர, நிர்மலா கான்வென்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார். தமிழ் திரைப்படங்களில் இதுவரை எந்த ஒரு திரைப்படங்களிலும் ஹீரோயினாக அறிமுகம் ஆகாத ஸ்ரேயா சர்மா இப்பொழுது சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் அன்பை அள்ளி வருகிறார்.

2010-ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்து நம் அனைவரையும் மகிழ வைத்த நடிகை ஸ்ரேயா சர்மா இப்பொழுது கதாநாயகியாகவும் பல படங்களில் ஜொலித்து வருகிறார். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், தமிழ் என பல மொழிகளில் எண்ணற்ற குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 

தமிழில் இதுவரை குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்திருக்கும் ஸ்ரேயா சர்மா இதுவரை எந்த ஒரு திரைப்படங்களிலும் ஹீரோயினாக கமிட் ஆகாத நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் தமிழ் ரசிகர்கள் இன்றளவும் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

ரசிகர்களுக்காக அவ்வப்போது தனது புதுப்புது புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஸ்ரேயா சர்மா, இப்பொழுது இணையவாசிகளை கிறங்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விரைவில் இவர் தமிழ் சினிமாவில் என்ட்ரி தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.