நடிகர் சசிகுமார் நடித்து சமுத்திரகனியின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த நடிகை சாந்தினி, முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை  திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார்  அளித்திருந்தார்.

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகை சாந்தினி, முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை  திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து  நெருக்கமான உறவில் இருவரும் இருந்ததாக தெரிவித்தார். இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவிப்பதாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினார்.மேலும் அடியாட்களை வைத்து தன்னையும் தன் குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து காவல் நிலைய ஆணையரிடம் புகார் தெரிவித்த நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டனோடு இருந்த புகைப்படங்கள் மற்றும் வாட்ஸ் ஆப் குறுந்தகவல்கள் ஆகிய  ஆதாரங்களை  சமர்ப்பித்தது மட்டுமல்லாமல்  நடிகை சாந்தினியோடு நெருக்கமாக இருக்கும் சமயங்களில் நடிகை சாந்தினிக்கே தெரியாமல் எடுத்த அவரது நிர்வாண ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டுவதாகவும்  தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் அளித்தது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது சாந்தினி கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் எந்த சமயத்திலும் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.